பாக்யராஜ் இயக்கி நடித்து மிகப்பெரிய ஹிட்டான ‘முந்தானை முடிச்சு’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார்.

மெகா ஹிட் திரைப்படம்

இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இயக்கத்தில், பாக்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து வெளிவந்த ‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவி மாபெரும் வெற்றி பெற்றது. 1983ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் இயக்குநர் பாக்யராஜின் படைப்புக்கு இன்னொரு மைல் கல் என்று சொல்லலாம். ஏவிஎம் நிறுவனம் தயாரித்து, இளையராஜா இசையமைத்திருந்த இப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட ‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் வெளிவந்து 37 ஆண்டுகள் ஆன பிறகு, தற்போது ரீமேக் செய்யப்படுகிறது. பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கப் போவதாக வெளியான தகவலைத் தவிர வேறு எந்த தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில், ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக யார் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. சசிகுமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத, ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோ சார்பில் ஜே.எஸ்.பி சதீஷ் தயாரிக்கிறார்.

அழுத்தமான கதைக்களம்

‘முந்தானை முடிச்சு’ படத்தின் ஒவ்வொரு சீன்களும் அனைவரின் மனதில் ஆழமாக பதிந்த நிலையில், ரீமேக்கிலும் அவ்வாறு சீன்கள் இருக்குமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கிராமத்து சப்ஜெக்ட் என்றாலே சசிகுமாரும், ஐஸ்வர்யா ராஜேஷூம் நடிப்பில் வெளுத்து வாங்குவர். அதேபோல் இந்தப் படத்திலும் அவர்களது நடிப்பைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ‘முந்தானை முடிச்சு’ ரீமேக் போஸ்டரை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு, ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பதாவது; “தமிழ் சினிமாவில் காலத்தை தாண்டி நிற்கும் மைல்கல் படங்களில் ஒன்றான ‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் நடிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். 2021 ஆம் ஆண்டு இப்படம் வெளிவரும். அதற்காக காத்திருங்கள். இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார். அதெல்லாம் ஓகே தான், அந்த முருங்கைக்காய் சீன் படத்தில் இருக்கா? இல்லையா? என்பது தான் தற்போது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here