விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் க/பெ. ரணசிங்கம் திரைப்படம் OTTயில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்து உள்ளது.

க/பெ. ரணசிங்கம்

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் க/பெ. ரணசிங்கம். விவசாயம், தண்ணீர் பிரச்சனை போன்ற அத்தியாவசிய தேவையான விஷயங்களை மையமாகக் கொண்டும், அதிகாரிகளுக்கு எதிராக சாதாரண மக்கள் போராடுவது போன்ற எதார்த்த கதையை மையமாக வைத்தும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் 90 சதவீத வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில், டப்பிங் பணிகள் இன்னும் மீதம் உள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் க/பெ. ரணசிங்கம் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

OTTயில் படங்கள்

கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்ளிட்ட படங்கள் OTTயில் வெளியான நிலையில், சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படமும் OTTயில் வெளியாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியின் படமும் OTT தளத்தில் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். 5 மொழிகளில், 10 உலக மொழிகளின் சப்டைட்டிலுடன், 150 நாடுகளுக்கும் மேல் படத்தை வெளியிடப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here