தல அஜித் படத்தில் விஜய் சேதுபதி இடம்பெறுவது போன்ற வீடியோ காட்சி ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

தல படத்தில் விஜய்சேதுபதி?

அஜித் நடிப்பில் வெளிவந்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது வலிமை எனும் படத்தில் அஜித் நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த வேலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தைப் பற்றி ஏதாவது ஒரு அப்டேட் வருமா என தல ரசிகர்கள் தினம் தினம் காத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இணைகிறார்களா ?

இவை ஒருபக்கம் இருக்க, தல அஜித் நடித்த ஆழ்வார் படத்தின் சிறிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கின்றது. 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த ‘ஆழ்வார்’ திரைப்படம், வசூல் ரீதியாக சரியாக போகவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் சிறிய வீடியோ ஒன்று தற்போது வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, கணினியியல் பலரின் வரைபடத்தை பார்க்கின்றனர். அதில் விஜய்சேதுபதியின் முகமும், பிறகு தல அஜித்தின் முகமும் வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், அஜித் படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய தொடங்கிவிட்டனர். ஒரு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்லாமல் குணசித்திர நடிகராகவும், வில்லனாகவும், தனக்கு ஏற்ற கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் கச்சிதமாக நடித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. இப்போது இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக அஜித்துடன் விஜய் சேதுபதி பணியாற்றுவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here