‘கனா காணும் காலங்கள்’ சீரியல் நடிகை ஸ்வேதா சுப்ரமணியதிற்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

மனம் கவர்ந்த சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இளசுகளை டார்கெட் செய்து உருவாக்கப்பட்ட ‘கனா காணும் காலங்கள்’ தொடர், 90களில் பிறந்தவர்களுக்கு மிகவும் பிடித்தமான தொடராக இருந்து வந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களிலேயே இத்தொடர் டிஆர்பியில் டாப்பில் இருந்தது. இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பாகின. இந்த இரு தொடர்களும் மாபெரும் வெற்றி தொடராக அமைந்திருந்தது. இத்தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் பின்னர் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் ஜொலித்து வருகின்றனர்.

நிச்சயதார்த்தம்

இந்த நிலையில், கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த நடிகை ஸ்வேதா சுப்ரமணியத்திற்கு சில தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில், ஸ்வேதாவின் உறவினர்கள் மட்டுமின்றி கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, ஸ்வேதா சுப்ரமணியத்திற்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here