விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் 4வது சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் வரை 100 நாட்களுக்கு நடத்தப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு காலதாமதம் ஆகியுள்ளது.

கவர்ச்சி நடிகை?

சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் 4 சீசன் விரைவில் தொடங்க இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் யார் யார் என்ற விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கும் நிலையில், கவர்ச்சி நடிகை கிரண் பிக்பாஸ் 4 சீசனில் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை கிரண், தமிழில் ஜெமினி, வில்லன், வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here