‘சூரரைப் போற்று’ திரைப்படம் OTTயில் ரிலீஸ் ஆவதை ஆரம்பத்தில் ரசிகர்கள் வேண்டாம் என்று சொன்னாலும், சூர்யாவின் முடிவு கண்டிப்பாக அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நம்பி அப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

OTTக்கு எதிர்ப்பு

2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “சூரரைப் போற்று”. கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியிட முடியாமல் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனால் படத்தை OTTயில் ரிலீஸ் செய்யலாம் என சூர்யா அதிரடி முடிவை எடுத்தார். படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டுமென்று பெரியளவில் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சூர்யாவின் ரசிகர்களுக்கு அவரது இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை தந்ததுடன், ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்த முடிவை மாற்றிக் கொள்ளுமாறு சூர்யாவிற்கு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ரசிகர்கள் வரவேற்பு

பிறகு, சூர்யா எந்த முடிவை எடுத்தாலும் அது நல்ல முடிவாகத் தான் இருக்கும் என நம்பிய ரசிகர்கள், தாங்கள் இருக்கும் தைரியத்தில் தான் சூர்யா இதுபோன்ற ஒரு முடிவை எடுத்துள்ளார் என்றும் பேசத் தொடங்கிவிட்டனர். ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசானின் வெளியாவது போன்ற பல போஸ்டர்களை, ரசிகர்கள் தாங்களாகவே டிசைன் செய்து அதனை ஷோசியல் மீடியாக்களில் வைரலாக்கி வருகின்றனர். ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம்மில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளிவர தயாராக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ரிலீஸூக்கு முன்னதாகவே 100 கோடி ரூபாயை வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அறிந்த சூர்யாவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை கொண்டாடும் வகையில், டுவிட்டர் பக்கத்தில் #SooraraiPottruHits100crPB என்ற ஹேஷ்டேக் உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல்கள் அனைத்தும் யூடியூபில் பெரியளவில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here