பிரபல தொழிலதிபரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான ஹெச். வசந்தகுமாரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மரணம்

கடந்த 10-ந் தேதி கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி. வசந்தகுமார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன் வசந்தகுமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இந்நிலையில் இரவு 7 மணி அளவில் ஹெச். வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள், அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி, கமல் இரங்கல்

இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அருமை நண்பர் வசந்தகுமாரின் மறைவு மிகுந்த வருத்ததை அளிப்பதாகவும், அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். நடுத்தர குடும்பங்களில் வலியறிந்து வியாபாரத்தை வளர்த்தவர் வசந்தகுமார் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர் என்றும் அரசியலிலும் கரை படியாது வாழ்ந்து மறைந்த வசந்தகுமாரின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு என்றும் கமல் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் இரங்கல்

வசந்தகுமார் அய்யா இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அருமை நண்பர் விஜய் வசந்த் மற்றும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். நடிகர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இது பொய்யாக இருக்ககூடாதா? சகோதரர்கள் விஜய் வசந்த் மற்றும் வினோத் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் தைரியமாக இருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் நடிகர் ராதா ரவி, இயக்குநர்கள், சுசீந்திரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் வசந்தகுமாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here