சாய் பல்லவியுடன் இணைந்து நடிக்க ராஷ்மிகா மந்தனா மறுத்துவிட்டதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

‘ரவுடி பேபி’

‘கஸ்தூரி மான்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சாய் பல்லவி. ‘தாம் தூம்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இரண்டு படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததால், தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த ஒரு படத்திலேயே ரசிகர்களின் மனதில் தனக்கான இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரத் தொடங்கினார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் சாய் பல்லவிக்கு, ‘தியா’ என்ற திரில்லர் படத்திலும் நல்ல பெயர் கிடைத்தது. அதன்பின் ‘மாரி 2’ படத்தில் தனுஷூடன் இணைந்து நடித்து கலவையான விமர்சனங்களை பெற்றபோதும், அவரது அசத்தல் நடனத்தில் உருவான ‘ரவுடி பேபி’ என்ற பாடல், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாளம் போட வைத்தது. இந்தப் பாடலுக்கு இப்போதும் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டே தான் இருக்கின்றது. நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் பின்னி எடுக்கும் சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் இரண்டு படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

ராஷ்மிகா எஸ்கேப்

‘டாக்சி வாலா’ படம் புகழ் ராகுல் சங்க்ரித்யான் இயக்கத்தில் நானி நடிக்கவிருக்கும் படம் ‘ஷ்யாம் சிங்க ராய்’. இப்படம் இரண்டு ஹீரோயின் கதை என்பதால் சாய்பல்லவி மற்றும் தெலுங்கில் ஏற்கனவே தனது மார்க்கெட்டை பிடித்த ரஷ்மிகாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளனர். ஆனால், சாய் பல்லவி என்ற பெயரைக் கேட்டவுடன், திரும்பிப் பார்க்காமல் ஓடி விட்டாராம் ராஷ்மிகா மந்தனா. இப்படத்தில் நடிக்க மறுத்ததற்கு என்ன காரணம் என்று இதுவரை வெளிவராத நிலையில், இரண்டு ஹீரோயின்கள் என்பதால் மறுத்துவிட்டாரா? இல்லை முதலில் தன்னிடம் பேசாமல் சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்று கருத்து வேறுபாடா? அல்லது சாய் பல்லவியிடம் இருக்கும் நடிப்பு, நடனத் திறமையை கண்டு பயந்துவிட்டாரா? என்று பல தரப்பிலும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ராஷ்மிகா பல்டி அடித்ததைதொடர்ந்து, அந்த கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு சூப்பர் ஹீரோயினை ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்த இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்தில் அதிதி ராவ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதைப்பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராத நிலையில், ‘ஷ்யாம் சிங்க ராய்’ படத்தில் சாய் பல்லவி மற்றும் அதிதி ராவ் நடிப்பதாக செய்திகள் மட்டும் இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here