நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘லாபம்’ திரைப்படத்தின் டிரெய்லர் விநாயகர் சதுர்த்தியான நாளை வெளியாகிறது.

‘லாபம்’

புரட்சிகர இயக்குநர் என அழைக்கப்படும் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘லாபம்’. இப்படத்தில் ஸ்ருதிஹாசன், சாய் தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதி, மிக முக்கிய கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கிவரும் எஸ்.பி. ஜனநாதனுடன் கூட்டணி அமைத்துள்ளதால் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாளை வெளியீடு

‘லாபம்’ படத்தின் புகைப்படங்கள் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, வித்தியாசமான லுக்கிலான விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. ‘லாபம்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் விநாயகர் சதுர்த்தியான நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை விஜய்சேதுபதியும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here