பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடும், அதில் பணியாற்றும் டெக்னீசியன்கள் முதல் நடிகர்கள் வரை எவ்வாறு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை சுஜிதா.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றாலே இல்லத்தரசிகள் மட்டும்தான் அதைப் பார்ப்பார்கள் என்ற கண்ணோட்டம் மறைந்து, தற்போது இளைஞர்கள் கூட சீரியல்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். மாமியார் கொடுமை, எப்போதும் அழுகை என்று இருந்து கொண்டிருந்த சீரியல்கள் அனைத்தும் ரொமான்ஸ், லவ், சென்டிமெண்ட், சண்டைக்காட்சி, பாடல் காட்சி என்று பல ரகங்களாக இருப்பதனால் எல்லோரும் சீரியல்களை ரசிக்கத் தொடங்கி உள்ளனர். கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், கூட்டுக் குடும்பத்தின் அவசியம் மற்றும் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா சித்ரா, குமரன், ஹேமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீவா மற்றும் கதிர் இருவரும் முறையே மீனா மற்றும் முல்லை ஆகியோரை திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த ஜோடிகளுக்கு இடையிலான காதல் காட்சிகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. ‘பாண்டியன் ஸ்டோர்ஸில்’ மீனா கதாபாத்தில் நடிக்கும் ஹேமாவுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு உண்டு. ஆரம்பத்தில் நாடகத்தில் பார்ப்பவர்களை கோபப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ஹேமா, தற்போது செல்ல மருமகளாக மாறினாள். தொடக்கத்தில் வில்லி போலவே ஹேமாவின் கதாபாத்திரம் இருந்தாலும், இப்போது குடும்பத்தில் ஒன்றிவிட்டது போல் கதையை காட்டத் தொடங்கிவிட்டனர்.

பாதுகாப்புடன் ஷூட்டிங்

கொரோனா ஊரடங்கு காரணத்தால் ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது உரிய பாதுகாப்புடனும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் சீரியல் ஷூட்டிங்கை நடத்தலாம் என்று சமீபத்தில் அரசு அறிவித்து இருந்தது. இதனால் மீண்டும் புது எபிசோடுகள் மற்றும் புதுப்பொலிவுடன் சீரியல்கள் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளன. பாதுகாப்புடன் இருப்பதையும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கடைபிடிக்கப்படும் விதிகளையும், அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் “பாண்டியன் ஸ்டோர்ஸின்” மூத்த மருமகள் தனம் என்கிற சுஜிதா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது வீட்டிலிருந்து காரில் புறப்படும் சுஜிதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு சென்று அங்கு மேக்கப் போட்டு நடிப்பது முதல் அங்கிருக்கும் கேமராமேன் போன்ற அனைத்து ஊழியர்களிடமும் பழகும் விதத்தையும், நடிகர்களுடன் அடிக்கும் லூட்டியையும் பதிவு செய்துள்ளார். சித்ராவும், சுஜிதாவுடன் சேர்ந்து பேசத் தொடங்கி, நாங்கள் அனைவரும் இங்கு சமூக இடைவேளையோடும், முகக்கவசம் அணிந்தும் பாதுகாப்பாக இருக்கிறோம். நீங்களும் அதுபோல் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் என்ற பதிவுடன் வீடியோவை முடிக்கிறார்கள். இந்த வீடியோ அனைவரையும் கவரும் விதமாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here