நடிகர் கமல்ஹாசன் சினிமாத் துறைக்கு வந்து 61 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ‘மாஸ்டர்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போராடும் நாயகன்

கமல்ஹாசன் நடிப்பில் பல படங்கள் வெளிவந்தாலும், அவரது ரசிகர்கள் மத்தியில் “சத்யா” திரைப்படம் எப்பொழுதும் ஒரு பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. சமுதாய நலனுக்காக குரல் கொடுக்கும் கமல்ஹாசன், திரைப்படத்திலும் தனது முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில், சத்யா திரைப்படம் கதைக்காகவும், பாடல்களுக்காகவும் பெரிய அளவில் பேசப்பட்டது. கமல்ஹாசன் சினிமா துறைக்கு வந்து 61 வருடங்கள் ஆனதை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘சத்யா’ படத்தில் இடம்பெற்ற “போட்டா படியுது” என்ற பாடலை மீண்டும் புதிதாக உருவாக்கி வெளியிட்டுள்ளார். அந்தப் பாடலில் கமல்ஹாசன் செய்யும் அத்தனை சேட்டைகளையும், தனது புது பாடலில் அவர் செய்திருக்கிறார்.

பெருமை கொள்கிறேன்

இந்த வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது; “கமல்ஹாசன் சார் 61 வருடங்கள் நிறைவு செய்வதை வாழ்த்துவதில் நான் அதிக மகிழ்ச்சி மற்றும் பெருமை கொள்கிறேன். 1987ல் வெளிவந்த ‘சத்யா’ திரைப்படத்தின் ‘போட்டா படியுது’ பாடல் ரெபல் ஆந்தம் வெளியிடுவதில் நான் பெருமையடைகிறேன். இந்த பாடலை உருவாக்கியவர் சிம்பா அரவிந்த் ஸ்ரீதர் என லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

கமல் நெகிழ்ச்சி

இந்த டுவீட்டைப் பார்த்த கமல்ஹாசன் “லோகேஷ் கனகராஜ் மற்றும் அந்தப் பாடலை உருவாக்கிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது; “நான் நெகிழ்ச்சி அடைந்தேன். இது சாதாரண மலரும் நினைவுகள் அல்ல. இது நிபந்தனையற்ற அன்பு. இதற்காக நான் திருப்பி அளிக்கும் பரிசு இதே விதத்தில் தான் இருக்க வேண்டும். என்னை ஊக்குவிப்பவர்கள் நீங்கள். இந்த மாரத்தானில் என்னை நீங்கள் ஓட வைக்கிறீர்கள். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமலஹாசனின் 61 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமல்ஹாசன். அப்படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு பெருமளவு பேசப்பட்டது. கமலின் இந்த 61 ஆண்டுகால வெற்றியை கொண்டாடும் விதமாக #61yearsofkamalism என்ற ஹேஷ்டேக் கமல் ரசிகர்களால் பெருமளவு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here