சமந்தாவும், ரஷ்மிகாவும் அக்கா, தங்கையாக நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது.

நல்ல வரவேற்பு

கன்னடத்தில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’, ‘தேவதாஸ்’ போன்ற படங்களில் நடித்த இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தார். தற்போது தமிழில் ‘சுல்தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. சினிமாவிற்கு வந்த சில ஆண்டுகளிலேயே ஒரு முன்னணி நடிகையாக உருவெடுத்து, பல ரசிகர்களைப் பெற்றுள்ளார் ராஷ்மிகா.

அக்கா, தங்கை

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா, திருமணத்திற்குப் பிறகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கும் சமந்தா, அதில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக இருப்பதால் அதில் நடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறார் சமந்தா. இப்படத்தில் ரஷ்மிகா மந்தனாவும் உடன் இணைந்து நடிக்கிறார் என்றும் சமந்தாவும், ராஷ்மிகாவும் அக்கா – தங்கையாக நடிக்கிறார்கள் என்றும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இப்படத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here