சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் “மூத்தோன்” படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்ததையொட்டி நடிகர் நிவின்பாலிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

வித்தியாசமான கதைக்களம்

அனைத்து மொழிப் படங்களிலும் ஒவ்வொரு சாக்லேட் பாய்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழில் மாதவன், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, மலையாளத்தில் நிவின்பாலி என்று இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகின்றது. பெண்களின் கனவு நாயகனான நிவின்பாலி, சமீப காலமாகவே பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சென்ற ஆண்டு வெளியான “மூத்தோன்” திரைப்படம் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல், பல மொழி ரசிகர்களால் பெருமளவு கவரப்பட்டது. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இந்திய அளவில் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாகவும் விளங்கியது. “மூத்தோன்” படம் தற்போது உலக அளவில் 3 விருதுகளை வென்று அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது.

விருதுகளை வென்ற நாயகன்

சுவாரஸ்யமான கதைக்களமும், கேட்டு ரசிக்கும் படியான பாடல்களும், தரமான படைப்புகளையும் கொண்ட திரைப்படமாக இருந்தால் அது இந்தக் காலகட்டத்தில் மட்டுமல்ல, எப்பொழுதும் நல்ல பெயரையே பெறுகிறது. அந்த வகையில் “மூத்தோன்” திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதைதொடர்ந்து மலையாள திரையுலகினர் மட்டுமல்லாமல், அனைவரும் நிவின்பாலியை கொண்டாடி வருகின்றனர். நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படம் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்த அனைவரும், உலக அளவில் இப்படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர். இப்படம் திரைக்கு வந்த முதல் நாளிலேயே இந்திய அளவில் பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. அதையும் தாண்டி தற்போது சர்வேதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வாரிக் குவித்து மீண்டும் அனைவரையும் பெருமைப்பட செய்துள்ளது. சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று இந்த திரைப்படத்திற்கு 3 விருதுகள் கிடைத்துள்ளது. நிவின்பாலி சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். இதுவரை எத்தனையோ விருதுகளை வாரி குவித்தாலும், நிவின் பாலிக்கு சர்வதேச அளவில் இதுவே முதல் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

குவியும் வாழ்த்து

சர்வேதேச இந்திய திரைப்பட விழாவில் தேர்வுக் குழுவில் இருந்த நடுவர்களுக்கும், தன்மீது அதீத நம்பிக்கை வைத்து இந்த மாதிரி கதாபாத்திரத்தை கொடுத்த ‘மூத்தோன்’ திரைப்பட இயக்குநருக்கும் நடிகர் நிவின்பாலி நன்றியை தெரிவித்திருக்கிறார். நிவின் பாலி மட்டுமல்லாமல் இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சஞ்சனா சிபு என்ற குழந்தைக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதும் கிடைத்துள்ளது. இவ்வாறு பல விருதுகளை வாரி குவித்து உள்ள இப்படத்தின் குழுவினருக்கும், இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here