மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்க்கோட்டையன் தெரிவித்தார்.

தேர்வு முடிவுகள்

சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள், வழக்கம் போல் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் வெளியிடப்படும் என்றார். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் கூறினார். கிரேடு முறையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வழங்கப்படலாம் என வெளியான செய்திக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் முடிவெடுக்கப்படும் எனக் கூரிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மும்மொழிக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here