நடிகர் விஜய்யை ஏற்கனவே மீரா மிதுன் சீண்டி வம்பிழுத்த நிலையில், தற்போது மீண்டும் அவரை விமர்சித்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.

சர்ச்சை நாயகி 

சர்ச்சைக்கு மறுபெயர் என்றால் அது நடிகை மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு சர்ச்சைக்கு சொந்தமான இவர், தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பலரும் விமர்சித்தாலும், அறிவுரை கூறினாலும் அதனை அவர் கேட்பதாக இல்லை. ஆனால் ரசிகர்களை திட்டுகிறாரே தவிர பதிவிடுவதை நிறுத்துவில்லை. சமீபத்தில் ரஜினி, விஜய், சூர்யா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளைச் சீண்டி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சித்த மீரா மிதுன், கமல்ஹாசனையும் சாடினார். திரிஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டினார். பின்னர் சூர்யாவை வம்பிழுத்த மீரா மிதுன், அவருக்கு நடிக்கவே தெரியாது என்றும் சாதாரண காட்சிக்கு கூட 20 டேக் வாங்குவார் என்றும் கூறி கிண்டலடித்தார்.

கொலை மிரட்டல்!

தொடர்ந்து நடிகர், நடிகைகளை விமர்சித்து வந்த மீரா மிதுன், தன்னை சூர்யா, விஜய் ரசிகர்கள் தொலைபேசியில் மிரட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். சூர்யா, விஜய் ரசிகர்களிடம் இருந்து மோசமான மெசேஜ்கள், மொபைல் அழைப்புகள், கற்பழிப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்கள் வருவதாகவும், தனது மொபைல் எண்ணை, பல்வேறு குழுக்களுக்கு பரவ விட்டுள்ளதாகவும் கூறினர். தனக்கு ஏதாவது நடந்தால், சூர்யா தான் பொறுப்பு என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், கோலிவுட்டில் மொத்தம் 4 குரூப் இருப்பதாக தெரிவித்தார். கமல்ஹாசன் மற்றும் குடும்பத்தினர், எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர், சிவக்குமார் அண்ட் பேமிலி, நான்காவதாக குரூப் ஆன் ஸ்கிரீனில் சத்தமில்லாமல் இருந்தாலும், ஆப் ஸ்கிரீனில் அப்பா, பிள்ளை ஆட்டம் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கு என ஜாடையாக சிம்புவையும் வம்பிழுத்தார்.

மீண்டும் சீண்டிய மீரா மிதுன்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் நடிகர் விஜய்யை சீண்டியுள்ளார் மீரா மிதுன். நண்பர்கள் தினத்தன்று தனது நண்பர்களுடன் விஜய் வீடியோ காலில் பேசிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அச்சமயத்தில் மீரா மிதுன் ஒரு யூடியூப் சேனலுக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். அப்போது விஜய்யின் வீடியோ கால் புகைப்படத்தை பார்த்த அவர், “நான் ஆன்லைன் வரும்போது தான் அவரும் ஆன்லைன் வருவாரா” எனக்கூறி விமர்சித்தார். மீரா மிதுன் மீண்டும் விஜய்யை விமர்சித்ததால் கோபமடைந்த தளபதி ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here