நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்கள் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

கனவு நாயகி

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்தார். தற்போது தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். வடிவுக்கரசி, காயத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடரான ‘ரோஜா’ தொடரில் சில அத்தியாயங்கள் மட்டுமே அவதரிக்கும் சிறப்புத் தோற்றத்தில் யாஷிகா ஆனந்த் தற்போது நடித்து வருகிறார்.

திருமணம் ஆயிடுச்சா?

இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். வரலட்சுமி நோன்பை முன்னிட்டு யாஷிகா ஆனந்த் சேலை கட்டி, நெற்றி வகிடில் பொட்டு வைத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். சுமங்கலிப் பெண் என்ற அடையாளத்திற்காக பெண்கள் நெற்றி வகிட்டில் வைக்கப்படுவதுதான் குங்குமம். யாஷிகாவின் இந்த செயலை பார்த்து அவருக்கு திருமணம் முடிந்துவிட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். யாஷிகா தொழிலதிபர் ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக அவ்வப்போது வதந்திகள் பரவி வரும் நிலையில், இந்த புகைப்படம் அதை மேலும் உறுதி செய்வதாக அமைந்தது.

விளக்கம்

ரசிகர்களின் கேள்விக்கு விளக்கமளித்துள்ள நடிகை யாஷிகா, அது போட்டோ ஷூட்டிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் “Pls I’m not married guys” என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here