ஸ்டார் மா டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் நான்காவது சீசனுக்கான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘பிக் பாஸ்’

கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை போலவே தெலுங்கிலும் இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்து உள்ளன. முதல் சீசனை ஜூனியர் NTR தொகுத்து வழங்கினார். அவருக்கு நல்ல வரவேற்பும், ரசிகர்களும் அதிகம் என்பதால் சம்மந்தப்பட்ட சேனல் முன்னேற்றம் கண்டது. இரண்டாவது சீசனை நடிகர் நானியும், மூன்றாவது சீசனை நடிகர் நாகார்ஜூனாவும் தொகுத்து வழங்கினர்.

குஷியில் ரசிகர்கள்

அதனைத்தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 4க்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் லோகோ வெளியான நிலையில், படப்பிடிப்பு நடப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. இதனால் தெலுங்கு பிக் பாஸ் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர். நடிகர் நாகார்ஜுனா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மீண்டும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டதாக குறிப்பிட்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். எனவே இது ‘பிக் பாஸ்’ 4க்கான ஷூட்டிங்காக இருக்குமோ என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here