‘ரஜினிமுருகன்’ என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருவதை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் அதன் உரிமையாளருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

வெற்றி படம்

பொன்ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் ‘ரஜினிமுருகன்’. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தற்கு, அவர்களின் யதார்த்தமான நடிப்பும், தனது கதாபாத்திரங்களை முழுமையாக ஏற்று நடித்ததும் தான் காரணம். பாடல்கள், காமெடி, சென்டிமென்ட் எனக் கலவையாக வெளியான இப்படம், அனைவரின் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டு நல்ல வசூல் பார்த்தது. கலகலப்பான பேச்சு, எதார்த்தமான நடிப்பு, அசால்ட்டான காமெடி என எப்போதும் கலக்கும் சிவகார்த்திகேயன், ‘ரஜினிமுருகன்’ படத்திலும் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தினார்.

டிவி முதல் வெள்ளித்திரை வரை

டிவி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பதற்கு அவரது அயராத உழைப்பு மட்டும் தான் காரணம். மெரினா, எதிர்நீச்சல் போன்ற படங்களில் ஒரேமாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த சிவா, தற்போது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றவாறு படங்களைக் கொடுத்து வருகிறார். கிராமத்து கதையம்சத்தில் நடித்தால் வெற்றி பெறுமா? பெறாதா? என்று தயங்கியே இருந்த சிவா, அதையும் விட்டு வைக்கக்கூடாது என்று ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் அனைவரும் வியக்கும் வண்ணம் நடித்தார். தனது எதார்த்தமான நடிப்பால் படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

ரஜினி முருகன் டீ ஸ்டால்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட வெற்றியை தொடர்ந்து, அதே கூட்டணி மீண்டும் ‘ரஜினிமுருகன்’ என்ற திரைப்படத்தில் இணைந்தது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை வெளியிட மிகவும் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால், அதையும் தாண்டி படம் வெளிவந்து, பெரிய அளவில் பேசப்பட்டது. அதனைதொடர்ந்து வெளியான ‘ரஜினிமுருகன்’ படமும் மிகப்பெரும் ஹிட் ஆனது. இப்படத்தில் ரஜினிமுருகன் என்ற பெயரில் சிவகார்த்திகேயன் ஒரு டீ கடையை நடத்தி வருவார். அதே பாணியில் அவரது தீவிர ரசிகரான ஒருவர், தனது டீக்கடைக்கு ரஜினிமுருகன் டீ ஸ்டால் என பெயர் வைத்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைப்பார்த்த சிவகார்த்திகேயன் “நம்ம நண்பருக்கு வாழ்த்துக்கள் ப்ரோ” என்று தனது வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here