நடிகை கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையேயான மோதல் மீண்டும் துவங்கியுள்ளது.

தைரியமான பெண்

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் முக்கியமான ஒருவர் நடிகை கஸ்தூரி. சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகள், பெண்களுக்கு ஏற்படும் அவமதிப்பு, துன்புறுத்தல்கள் போன்ற அனைத்து விஷயங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். சினிமா மட்டுமல்லாமல் அரசியல் சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் தைரியமாக கேள்வி கேட்டு வருகிறார்.

சீண்டிய நெட்டிசன்

சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி யார் தரைகுறைவாக பேசினாலும் அவருக்கு தக்க பதிலடி கொடுத்து அந்தப் பிரச்சனையை அப்போதே முடித்துக் கொள்வார் நடிகை கஸ்தூரி. அந்த வகையில், தற்போது டுவிட்டரில் தன்னை கிழவி என்று குறிப்பிட்ட ஒருவருக்கு தகுந்த பதிலடியை கொடுத்துள்ளார். அவர் பிரபுவுடன் இணைந்து நடித்த படத்தின் வீடியோவை பதிவிட்ட நபர் ஒருவர் “இது நம்ம கஸ்தூரி கிழவி தானே” எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நடிகர் அஜித்தின் புகைப்படத்தை புரொபைல் பிக்சராக வைத்திருக்கும் அந்த நபர், அஜித் சார்ந்த பல ஹேஷ்டேக்குகளையும் குறிப்பிட்டுள்ளார்.

கடுப்பான கஸ்தூரி

இதைப்பார்த்து கடுப்பான கஸ்தூரி அவருக்கு கோபமாக பதிலளித்துள்ளார். எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? அஜித் சார் கேட்டாரா அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு? இதுல காமெடி என்னனா கஸ்தூரி கிழவிக்கு அஜித் சாரை விட அஞ்சு வயசு கம்மி தான். ஹையோ ஹையோ” என டுவிட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார் நடிகை கஸ்தூரி. அதுமட்டுமில்லாமல் “போய் வேலை இருந்தா பாருங்கடா”. உங்கள மாதிரி #dirtyAjithFansனால All Respectful Ajith Fansக்கு கெட்ட பேரு” இது புரியிற அளவுக்கு உங்களுக்கு அறிவு இருக்கா? இல்லையா? என்றும் அவர் கூறியிருக்கிறார். அஜித் ரசிகர்கள் கஸ்தூரியை வம்பிழுப்பது வாடிக்கையாகி கொண்டே இருக்கிறது. சிறிது காலம் அமைதியாக இருந்த அவர்கள், மீண்டும் அதனை தொடங்கியிருக்கின்றனர். இந்த மாதிரி அவதூராக பேசுபவர்களை தண்டிக்க வேண்டுமென்று எத்தனையோ முறை அஜித்திடம் நடிகை கஸ்தூரி நேரடியாக கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here