சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் 2019 ஆண்டு வெளிவந்த தமிழ் படமான ‘கைதி’ திரையிடப்படவுள்ளது அப்படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘கைதி’

கார்த்தி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கைதி’. இப்படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியன் மற்றும் தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ‘கைதி’ திரைப்படத்திற்கு, சாம் சி.எஸ் இசை அமைத்திருந்தார். ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்ட இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. “தன் மகளை நாடி ஒரு தந்தையின் பயணத்தை” மிகவும் உணர்ச்சிகரமான வகையில் இயக்குநர் இப்படத்தை படமாக்கியுள்ளார்.

இயக்குநர் மகிழ்ச்சி

உலகளவில் மிகவும் பிரபலமான திரைப்பட விழாக்களில் ஒன்றான, சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், ‘கைதி’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இந்த விழா டொராண்டோவில் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த செய்தியால் மகிழ்ச்சியில் உள்ள படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “என் முழு குழுவிற்கும் இந்த வெற்றிக்காக ஒரு பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here