நடிகை நீலிமா ராணி நடுரோட்டில் நின்று எடுத்த விதவிதமான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்குள் நுழைந்தவர் நீலிமா ராணி. சிறுவயதிலேயே ராதிகா சரத்குமார் நடித்த தெலுங்கு சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் சீரியல்களும், திரைப்படங்களிலும் நடித்து வந்த அவருக்கு, நல்ல பிரேக் கொடுத்தது மெட்டி ஒலி மற்றும் கோலங்கள் சீரியல் தான். இதன்பின் சன் டிவியில் வெளிவந்த பல சீரியல்களில் நீலிமா ராணி நடித்தார். தற்போது முடிந்த வாணி ராணி மற்றும் தாமரை போன்ற சீரியல்களில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல வருடங்கள் கழித்து மலையாள சீரியலில் நீலிமா ராணி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடுரோட்டில் நீலிமா

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சீரியல் ஷூட்டிங் இல்லாததால் பல நடிகர், நடிகைகள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அந்த வகையில் வீட்டிலேயே இருக்கும் நீலிமா, தனது செல்ல மகளுடன் பொழுதை கழித்து வருகிறார். நீலிமாவிற்கு போட்டோஷுட் என்றால் மிகவும் பிடிக்கும். சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் இணைய தளத்தில் வைரலாகின. நடுரோட்டில் விதவிதமான புகைப்படங்களுடன் பல வித போஸ்கள் கொடுத்தபடி எடுக்கப்பட்ட ஏராளமான புகைப்படங்களை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நீலிமா. இதனைப் பார்த்த ரசிகர்கள், குழந்தை பிறந்த பிறகும் நீலிமாவின் அழகு கூடிக்கொண்டே செல்வதாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here