தமிழ், தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்து வரும் நடிகை பிரியாமணி தனக்கு வில்லி மாதிரியான ரோலில் நடிக்க ஆசை என விருப்பம் தெரிவித்துள்ளார்.

தேசிய விருது வென்ற ‘முத்தழகு

மாடலிங் என்ற துறையை தன் பள்ளி பருவத்திலேயே துவங்கிய பிரியா வாசுதேவ் மணி என்கிற பிரியாமணி, அதே வயதில் சினிமாவிலும் நடிக்க வந்தார். தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்த அவர், பாலிவுட் பக்கமும் சென்றார். திரையுலக வாழ்க்கையை தெலுங்கு சினிமாவில் துவங்கிய பிரியாமணி, தமிழில் இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கிய ‘அது ஒரு கனா காலம்’ திரைப்படத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. பின்னர் இவர் நடித்த ‘பெல்லைனா கொத்தாலு’ என்ற தெலுங்கு திரைப்படம் ஹிட் ஆக, வரிசையாக மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன்பின், தமிழில் பிரியாமணி நடித்த ‘பருத்திவீரன்’ திரைப்படம், அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது. இப்படத்தில் தான் நடிகர் சிவக்குமாரின் இரண்டாவது மகன் கார்த்தி அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் பிரியாமணியின் ஆகச்சிறந்த நடிப்பால், அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு விருதும் வழங்கப்பட்டது. பின்னர் பல கன்னட மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் அதிகம் நடித்தார் பிரியாமணி. தற்போது தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அசுரன்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ரோலில் நடிக்க ஆசை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டிலே இருக்கும் நடிகை பிரியாமணி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது; நான் ‘விராட பருவம்’ என்ற படத்தில் நக்சலைட் ஆக நடிக்கிறேன். இந்த ஊரடங்கில் பல கதைகளை கேட்கிறேன். சினிமாவில் ஒரு காலத்தில் ஹீரோக்கு ஒரு மரியாதை, ஹீரோயினுக்கு ஒரு மரியாதை என்று வித்தியாசம் இருந்தது. தற்போது அது மாறுகிறது. நயன்தாரா, தமன்னா, சமந்தா, காஜல் ஆகிய முன்னணி நடிகைகள் மார்க்கெட்டை பொறுத்து சம்பளம் வாங்குகின்றனர். அதனை பார்த்து நான் சந்தோஷப்படுகிறேன். எனக்கு பணத்தின் மீது அதிகம் ஆசை இல்லை. இப்போது நான் வாங்கும் சம்பளம் எனக்குத் திருப்தியாக உள்ளது. எனக்கு நல்ல கணவர் கிடைத்ததுள்ளார். திருமணம் ஆகி மூன்றாவது நாளே நடிக்க வந்துவிட்டேன். என் கால்ஷீட் விஷயங்களை கணவர் தான் பார்த்துக் கொள்கிறார். எனக்கு படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘நீலாம்பரி’ கதாபாத்திரம் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. ஒரு முழு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஆசை உள்ளது. இவ்வாறு பிரியாமணி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here