தேவையானவை

மீன் – 7 துண்டுகள்

புளி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 2

தேங்காய் – ஒரு பாதி

பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

சிகப்பு மிளகாய் – 10

மல்லித்தூள் – 1 சிட்டிகை

தனியாத்தூள் – 3 சிட்டிகை

பெருஞ்சீரகம் – 1 சிட்டிகை

மிளகு – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – 15 இலைகள்

வெந்தயம் – 1 சிட்டிகை

கடலை எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

மீன் துண்டுகளை நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் புளியை நன்றாக ஊற வைத்து கரைத்து, அதனுடன் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். சிறு துண்டுகளாக நறுக்கிய பெரிய வெங்காயத்துடன், அரைத்த மசாலா வகைகளை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும். தேங்காய், துருவல் தன்மையில் எடுத்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றி நன்றாக காய்ந்தபின், அதில் தேங்காய்த் துருவல், மல்லித்தூள், வெங்காயம், காய்ந்த மிளகாய், மிளகு, பெருஞ்சீரகம், 15 கருவேப்பிலை இலைகள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். தேங்காய்த்துருவல் பொன்னிறமாக மாறும் வரை மெதுவாக வறுக்க வேண்டும். வறுத்த பொருட்களை ஏழு நிமிடங்கள் நன்றாக ஆற வைத்து பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சிறிதளவு தண்ணீரை ஊற்றி மாவு தன்மை வரும்வரை மீண்டும் அரைக்கவும். ஏற்கனவே கரைத்து வைக்கப்பட்டுள்ள புளியையும், சிறிதளவு தண்ணீரையும் அதனுடன் சேர்த்து குழம்பு தன்மை வரும்வரை நன்றாக கலக்க வேண்டும். அதன்பின் வாணலியை சிம்மில் வைத்து எண்ணையை ஊற்றி வெந்தயத்தை அதனுடன் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வறுத்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குழம்பு கலவையை அதனுடன் ஊற்ற வேண்டும். கொதி நிலையை அடைந்தவுடன் அதற்குள் மீன் துண்டுகளை போட வேண்டும். சிறிது நேரம் ஆகிய பின் வாணலியின் மேல் தட்டை முழுவதுமாக மூடாமல் சிறிது இடைவெளி விட்டு மூடிவிடவேண்டும். அதன் தொடர்ச்சியாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதிக்கவைத்து இறக்கினால், சுவையான நாஞ்சில் மீன் குழம்பு தயார்.

நன்மைகள்

மீன்கள் சாப்பிடுவது கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மூச்சுப் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். குடல் புண்களை ஆற்றக் கூடியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here