தனக்கு பிடித்த நடிகர் யார் என்பதை தர்ஷன் தெரிவித்த பிறகு அவர்மீது கமல்ஹாசன் ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர்.

போதிய வரவேற்பு இல்லை

இலங்கையில் பிறந்து, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பிறகு வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்த தர்ஷன், சினிமாவின் மீதும், நடிப்பின் மீதும் உள்ள மோகத்தால் பல விளம்பரப் படங்களில் நடித்தார். பிரபல பிராண்டுகளுக்கு அவர் மாடலாகவும் இருந்திருக்கிறார். “வேறென்ன வேண்டும்” என்ற படத்தில் வில்லனாக அறிமுகமான தர்ஷனுக்கு, அப்போது போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன், டைட்டிலை தட்டிச் செல்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூழலில், கடைசி நேரத்தில் இவர் வெளியேறியது அனைத்து பிக்பாஸ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பல ரசிகர்களை பெற்றுள்ளார் தர்ஷன். இந்த நிலையில் தர்ஷனுக்கு கமல்ஹாசன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்களாக கமல்ஹாசனுடன் பயணம் செய்தும், சினிமாவில் அவருடைய ஆளுமையை தெரிந்திருந்தும், தர்ஷன் கூறிய வார்த்தைகள் கமல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினி தான் பிடிக்கும்

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தன்னுடைய ஃபேவரட் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தெரிவித்துள்ளார். சிறுவயதிலிருந்தே அவரது படங்களை பார்த்து வளர்ந்ததாகவும், அவரது ஸ்டைல் தனக்கு பிடிக்கும் எனவும் தர்ஷன் கூறியுள்ளார். இதனை அறிந்த கமல் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். கமல்ஹாசனின் அறிவாற்றலும், நடிப்பு திறனும், அவருடன் 100 நாட்கள் பயணம் செய்த பிறகும் ரஜினியை பிடிக்கும் என்று சொல்வதா? என கமல் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here