`நமது வாழ்வின் வீணான நேரங்கள் ஒருபோதும் திரும்பி வராது எனவே கடந்து செல்வோம் என இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் தான் பிரச்சனை

பாலிவுட்டில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டியில் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மானின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனை பார்த்த இயக்குநர் சேகர் கபூர், ரஹ்மானைக் குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது; உங்களுடைய பிரச்சனை என்னவென்று தெரியுமா ரஹ்மான். நீங்கள் ஆஸ்கர் வென்று வந்தது தான் பாலிவுட்டுக்கும் பிரச்சனை. பாலிவுட்டில் கையாள முடியாத திறன் உங்களிடம் இருப்பதையே இது வெளிப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்து செல்வோம்

சேகர் கபூரின் பதிவை பார்த்த் ஏ.ஆர். ரஹ்மான், அதற்கு பதிலளித்து டுவீட் போட்டுள்ளார். அதில், இழந்த பணம், புகழ் எல்லாம் திரும்பி வரும். ஆனால், நமது வாழ்வின் வீணான நேரம் ஒருபோதும் திரும்ப வராது. கடந்து செல்வோம். நாம் செய்வதற்கு சிறந்த செயல்கள் நிறைய உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here