பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. வழக்கமாக தேர்வு முடிவு வெளியான அன்றைய தினமே விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு எப்போது விண்ணப்பிப்பது என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் இந்த முறை தேர்வு முடிவு வெளியான 6 நாட்களுக்கு பிறகு அதுகுறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிளஸ் 2 பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு ஜூலை 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்குப் பதிவுசெய்ய விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் பாடங்களுக்கு தற்போது மறுகூட்டலோ, மறுமதிப்பீட்டுக்கோ விண்ணப்பிக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் தேவையில்லை எனில், மாணவர் விரும்பினால் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகக்கவசம் கட்டாயம்

தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை கருத்தில்கொண்டு, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பணியாளர்கள் பள்ளிக்கு வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துவர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here