தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

‘வைகைப் புயல்’

தமிழ் சினிமாவில் காமெடி காட்சிகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் வடிவேலு. தனது எதார்த்தமான நடிப்பாலும், உடல் அசைவுகளாலும் ரசிகர்களை கட்டிபோட்டார். ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால், திரையுலகிலிருந்து விலகியே இருந்தார் வடிவேலு. இறுதியாக 2017ம் ஆண்டு வெளியான விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில ஆண்டுகள் படங்களில் நடிக்கவில்லை என்றாலும்கூட, அவரது முகம் மீம்ஸ்களில் வலம் வந்தன.

மீண்டும் ஹீரோ?

இந்நிலையில், கொரோனா காலம் முடிந்ததும் பிரபல இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில், வடிவேலு ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க வடிவேலுவை நாயகனாக வைத்தே கதையொன்றை எழுதியிருக்கிறார் சுராஜ். இதுதொடர்பாக வடிவேலு – சுராஜ் இருவருமே அவ்வப்போது பேசியுள்ளனர். ‘தலைநகரம்’, ‘மருதமலை’ ஆகிய படங்களை இயக்கிய சுராஜ், வடிவேலுவின் நெருங்கிய நண்பராவார். சுராஜ் கடைசியாக இயக்கிய ‘கத்தி சண்டை’ படத்திலும் வடிவேலு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here