தமிழகத்தின் கோவை மாநகரில் தயாரிக்கப்பட்ட சேலையை உடுத்தியுள்ள நடிகை வித்யா பாலன் இந்திய நாட்டை பற்றி பெருமையாக கூறியுள்ளார்.

பாலிவுட் மகாராணி

பாலிவுட்டில் மகா ராணியாக திகழ்ந்து வருபவர் வித்யா பாலன். பெங்கால் மொழியில் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார் வித்யா பாலன். இதன்பின் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து, பல விருதுகளையும் வென்றுள்ளார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துபோயின. மற்ற மொழிகளை விட இந்தி திரையுலகில் தான் வித்யா பாலனுக்கு மார்க்கெட் அதிகம். நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் சுமிதாவாகவே வாழ்ந்தார். இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

OTT தளங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல சினிமா நட்சத்திரங்கள் வீட்டில் இருந்தே தங்களது விடுமுறையை கழித்து வருகின்றனர். லாக்டவுன் காலகட்டத்தில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் பலர் தங்களது படங்களை OTT தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். தமிழில் கூட பல நட்சத்திரங்களின் படங்கள் OTT தளத்தில் வெளியானது. அந்த வரிசையில் ஆக்ஷய் குமாரின் படம் OTTயில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு OTT தளம், தனது ஆளுமையை வெளிபடுத்தி வருகிறது.

கோவை கோரப்பட்டு

இதேபோல், நடிகை வித்யா பாலன் நடித்துள்ள ‘சகுந்தலா தேவி’ திரைப்படமும் OTT தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மனித கணினி என்று அழைக்கப்படும், பெங்களூரை சேர்ந்த கணிதவியலாளரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் படு பிசியாக ஈடுபட்டு வருகிறார் வித்யா பாலன். வீட்டில் இருந்தபடியே பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் பலரையும் கவர்ந்தது கோரப்பட்டு புடவை தான். புடவைகளை அதிகம் விரும்பும் நடிகைகளில் வித்யா பாலனும் ஒருவர். கோவை கோரப்பட்டு புடவையை உடுத்தி எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் வித்யா பாலன். இதுபற்றி அவர் கூறுகையில்; “இந்த கோரப்பட்டு புடவை கோவை மாவட்டதில் தயாரிக்கப்படுகிறது. ஜரிகை பார்டருடன் நெய்யப்பட்ட இந்த புடவையை ஒவ்வொருமுறை உடுத்தும் போதும், இதன் மென்மை கூடிக்கொண்டே போகிறது. கோவையில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் இதனை வாங்கினேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். வித்யா பாலன் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here