கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நடிகர் ரஜினிகாந்த் உயர்ரக சொகுசு காரில் வலம் வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25 தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள், சிறுகடை வியாபாரிகள் மீண்டும் தங்களது பணிகளை தொடங்கியுள்ளனர். இதனால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.

கார் ஓட்டும் ரஜினி

ஊரடங்கு காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால், நடிகர், நடிகைகள் பலர் சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது, உடற்பயிற்சி செய்வது, ரசிகர்களுடன் கலந்துரையாடுவது என தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது காரில் அமர்ந்து, தானே அதை ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் மாஸ்க் அணிந்தபடி ரஜினிகாந்த் லம்போகினி காரை ஓட்டுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here