நடிகை நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபட்டு வருகிறது.

பிஸி நடிகை

ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்த ‘டார்லிங்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றதால், தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தமிழைத் தவிர கன்னடம் மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2, கோ 2, ஹர ஹர மஹாதேவகி, கீ, சார்லி சாப்ளின் 2” என அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்ததால், தமிழில் பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறினார். கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வரும் நிக்கி கல்ராணி, சமூக வலைத்தளங்களில் தன்னுடைய பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகிறார். மேலும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

குடும்ப நிகழ்ச்சியில் நிக்கி

நிக்கி கல்ராணியும், ஆதியும் ‘யாகாவராயினும் நாகாக்க’, ‘மரகத நாணயம்’ போன்ற படங்களில் இணைந்து நடித்தனர். இதில் ‘மரகத நாணயம்’ படம் ஹிட் ஆனது. இந்நிலையில் நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இடையே காதல் இருப்பதாக கிசுகிசு ஒன்று தென்னிந்திய சினிமாத் துறையில் உலா வருகிறது. நடிகர் ஆதியின் தந்தையும், இயக்குநருமான ரவிராஜாவின் பிறந்த நாள் கடந்த 14-ம் தேதி கொண்டாடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால் யாரையும் அழைக்காமல் மிக சிம்பிளாக நடந்த இந்த நிகழ்ச்சியில், நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டுள்ளார். அதற்கான புகைப்படங்களை நடிகர் ஆதி டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஊரடங்கின் போது தனது வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆதி நிக்கி கல்ராணியை மட்டும் அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காதல்?

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மரகத நாணயம் படப்பிடிப்பிலிருந்தே இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், விரைவில் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. ஆனால் இதுகுறித்து இருவரும் எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை. தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் பற்றிய காதல் கிசுகிசு வருவது இது முதல்முறை அல்ல. பல பிரபலங்கள் இதுபோன்ற கிசுகிசுகளில் சிக்கி உள்ளனர். அனுஷ்கா – பிரபாஸ் தொடங்கி ஜெய் – அஞ்சலி வரை பல நடிகர்களின் பெயர்களை பட்டியலிடலாம். ஆனால் அவர்கள் யாரும் இது பற்றி வெளிப்படையாக பேசியது இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here