சின்னத்திரை நாயகன் சஞ்சீவ் பிறந்த நாளையொட்டி அவரது மனைவி ஆலியா மானசா ஒரு பெரிய சர்ப்ரைஸை கொடுத்து அவரை கண்கலங்கச் செய்துள்ளார்.

காதல் திருமணம்

“ராஜா ராணி” தொடரில் அப்பாவி செம்பாவாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த தொடரில் தனக்கு கணவராக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆல்யாவின் பிறந்தநாள் அன்று சிம்பிளாக திருமணம் செய்து கொண்டதாக சஞ்சீவ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் தெரிவித்த பிறகே அனைவருக்கும் அந்த விஷயம் தெரியவந்தது. இதனையடுத்து சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த ஆல்யா மானசா, அந்த குழந்தையை கொஞ்சி விளையாடும் வீடியோவையும் வெளியிட்டார்.

சர்ப்ரைஸ்

ஏற்கனவே, ஆல்யா மானசாவின் பிறந்தநாளுக்கு நள்ளிரவில் சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்து அசத்தினார் சஞ்சீவ் கார்த்திக். லாக்டவுனை மனதில் வைத்து வீட்டின் மொட்டை மாடியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் ஆல்யா. நள்ளிரவில் சஞ்சீவ், குழந்தை ஆய்லா செய்யது, அம்மா உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தார். அந்தப் புகைப்படங்களை சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்ததையடுத்து, பலர் ஆல்யாவுக்கு வாழ்த்து கூறினர்.

கண்கலங்கிய சஞ்சீவ்

அதேபோல், சஞ்சீவ் பிறந்த நாளுக்கு ஆல்யா மானசாவும் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார். சஞ்சீவ் ரசிகர்கள் இரண்டு பேரை இன்ஸ்டாகிராம் நேரலையில் வரவழைத்து, அவருக்குப் பிடித்த பாடலை பாட வைத்து, ஒரு கட்டத்தில் சஞ்சீவ் கண் கலங்கும்படி செய்துவிட்டார் மானசா. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதுடன், அதனை ரசிகர்கள் டிரெண்ட் செய்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here