கோவை அருகே நீர் தொட்டிக்கடியில் பதுங்கியிருந்த மரபணு குறைபாடுடைய அரிதான வெள்ளை நாகம் பிடிபட்டது.
நாகப்பாம்பு
கோவை போத்தனூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் நீர் தொட்டிக்கடியில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக, பாம்பு பிடி வீரர் மோகன் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மோகன், அங்கு பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக மீட்டார். மீட்கப்பட்ட பின்னர் அந்த பாம்பு மரபணு குறைபாடு உடைய அறிய வகை வெள்ளை நாகம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து கொடிய விஷம் உடைய அந்த வெள்ளை நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு பாட்டில் அடைக்கப்பட்டது.
ஒத்துழைப்பு தேவை
நாகப்பாம்பு உட்பட எந்த பாம்பையும் பொதுமக்கள் பார்க்கும் பொழுது, அதனை அடிக்கவோ பிடிக்கவோ முற்படக்கூடாது என தெரிவித்த வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரர் மோகன், பொதுமக்களிடம் இருந்து பாம்புகளையும், பாம்புகளிடமிருந்து இருந்து பொதுமக்களையும் பத்திரமாக பாதுகாக்க வனத்துறை, பாம்பு பிடி வீரர்கள், உயிரியல் தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.