பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், அவருக்கு முன்னாள் காதலி விளக்கேற்றி பூஜை செய்துள்ளார்.

மறக்க முடியாத மரணம் 

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் இறந்து இன்றுடன் ஒருமாதம் ஆகிறது. ஒரு மாதம் ஆகி விட்டதா? என்று கேட்கும் அளவிற்கு அவர் இன்னும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். ரசிகர்கள் பலரும் இது தற்கொலை அல்ல கொலை தான் என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். சினிமா பின்புலம் உள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் சேர்ந்து, முன்னணி நடிகராக இருந்த சுஷாந்த்தை டார்கெட் செய்து அவரது கேரியரை கெடுத்ததாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்றும் பல சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

தொடரும் விசாரணை 

சுஷாந்தின் மரணம் குற்த்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டுமென ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சுஷாந்தின்  மரணத்திற்குப் பிறகு அவரது முன்னாள் காதலியான அங்கிதா லோகன்தேவும், காதலியான ரியா சக்கர போர்த்தியும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியே இருந்தனர். இந்நிலையில் இன்று காலை சுஷாந்தின் மரணத்தை நினைவுகூறும் வகையில், தங்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்து அந்த புகைப்படத்தை எடுத்து “கடவுளின் குழந்தை” என்கின்ற போஸ்ட் உடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் முன்னாள் அங்கிதா.  சுஷாந்த்தும், அங்கிதாவும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் கருத்து வேறூபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். 

உருக்கமான பதிவு 

சுஷாந்த்தை காதலித்து வந்த நடிகை ரியா சக்கர போர்த்தி, சுஷாந்த்துடன் இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், காதல் மீது எனக்கு நம்பிக்கை வர நீங்கள் தான் முக்கிய காரணம். நான் உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். நீங்கள் இல்லை என்பதை என்னால் எப்பொழுதும் ஏற்கவே முடியாது. நீங்கள் தற்போது அமைதியான இடத்தில் இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். நிலா, நட்சத்திரங்கள், கேலக்ஸிகள் உங்களை வரவேற்று இருக்கும். இந்த உலகம் கண்ட சிறந்த அதிசயம் நீங்கள். நம் காதல் பற்றி வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உங்களை இழந்து  30 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், வாழ்நாள் முழுவதும் உங்களை காதலிப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here