தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யை பற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார் நடிகை மீரா மிதுன்.

சர்ச்சை நாயகி 

சர்ச்சைக்கு மறுபெயர் என்று ஒன்று இருந்தால் அது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு சர்ச்சைக்கு சொந்தமான இவர், தனது சமூக வலைதளப்பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பலரும் விமர்சித்தாலும், அறிவுறை கூறினாலும் அதனை அவர் கேட்பதாக இல்லை. ஆனால் ரசிகர்களை திட்டுகிறாரே தவிர பதிவிடுவதை நிறுத்துவில்லை. தற்போது ஒரு படி மேலே சென்று தமிழ் சினிமாவின் வசூல் ஜாம்பவான்களான ரஜினி மற்றும் விஜய்யை சீண்டி கருத்து தெரிவித்தது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் 

தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர் பட்டாளங்களை வைத்து இருக்கும் ரஜினி மற்றும் விஜய்யால், தமிழ் சினிமாவே பல கோடி ரூபாய் அளவிற்கு வசூல் அள்ளுகிறது. இப்படி இருக்க சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்ட நடிகை மீரா மிதுன், அதில் ரஜினியையும், விஜய்யையும் கடுமையாக சாடியுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை கன்னடர் என்றும் நடிகர் தளபதி விஜய்யை கிறிஸ்துவர் என்றும் பதிவிட்டு, அவதூறான வார்த்தைகளால் தீட்டியுள்ளார். திரைத்துறையில் இருக்கும் இரு முன்னனி நடிகர்களை எப்படி அவதூறான வார்த்தைகளால் பேசலாமா என்று பலரின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார் மீரா மிதுன்.

ரசிகர்கள் கொந்தளிப்பு 

மீரா மிதுன் சமீபத்தில் நடிகை திரிஷாவை சீண்டி கருத்து தெரிவித்து ரசிகர்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டார். தற்போது ரஜினி மற்றும் விஜய்யை பற்றி பேசியுள்ளார். இதனை பார்த்த ரஜினி, விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை சகட்டுமேனிக்கு திட்டித்தீர்த்து வருகின்றனர். அதிலும் சிலர் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களின் அட்டன்ஷன் இவர் பக்கம் இருக்க வேண்டும் என்று இதெல்லாம் செய்கிறார். அதனால் இதனை கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது என்றும் பதிவிடுகின்றனர். ஒருவர் நடிகை மீரா மிதுனுக்கு பைத்தியம் முத்தி போய் பல வருடங்கள் ஆகிறது என்றும் பதிவிட்டு தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here