பிரபல நடிகை அமலா பால் தேம்பித் தேம்பி அழும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு எனத் தெரியாமல் பதறிப்போகினர்.

ஏமார்ந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை அமலா பால், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கங்களில் நிறைய வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அதனை ரசிகர்களும் டிரெண்ட் செய்து வருகின்றனர். நடிகை அமலா பாலின் புதிய வீடியோ ஒன்று இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அமலா பால் தேம்பித் தேம்பி அழுவதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அழுததற்கான காரணம் தெரிந்ததும் கிண்டலும், கேலியும் செய்து வருகின்றனர். வீட்டில் சமைப்பதற்காக வெங்காயம் நறுக்கும் போது கண்களில் தண்ணீர் வந்ததை வீடியோவாக எடுத்து, பகிர்ந்துள்ளார் அமலா பால்.

அடுத்தடுத்து படங்கள்

நடிகை அமலாபால் கடைசியாக தமிழில் ‘ஆடை’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சென்ற வருடம் ரிலீஸ் ஆகி இருந்தது. அதனைதொடர்ந்து ‘அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் காட்டுப் பகுதிகளில் தான் நடைபெற்றது. மேலும் மலையாளத்தில் ‘ஆடு ஜீவிதம்’ படமும், தெலுங்கில் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்’ ஆகிய படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். லாக்டவுன் முடிந்த பிறகுதான் அமலாபால் இதில் எந்த படத்தில் முதலில் நடிக்கப் போகிறார் என்று தெரியவரும்.

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி?

தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க அமலா பாலுக்கு வாய்ப்பு வந்துள்ளதாக தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகியிருந்தது. போயபடி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள 106வது படத்தில், அமலா பால் ஹீரோயினாக நடிக்க படக்குழு அணுகியுள்ளது. சமீபத்தில் அப்படத்தின் இயக்குனர் அமலா பாலை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். முழு கதையையும் கேட்டு அமலா பாலுக்கு அது பிடித்துவிட்டதால், உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here