விஜய் சேதுபதி நடித்து வரும் “துக்ளக் தர்பார்” திரைப்படத்தில் அதிதி ராவ் அவருக்கு ஜோடியாகவும், மஞ்சிமா மோகன் தங்கையாகவும்  நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வேறு பரிமாணத்தில் “துக்ளக் தர்பார்” 

வழக்கமாக அரசியல் படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் வருவதில்லை. வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களே வெளி வருகின்றன. அதிலும் சில தோல்வியே தழுவிகின்றன. ஆனால் அரசியல் படங்களுக்கென தமிழ் சினிமாவில் தனி ரசிகர் கூட்டமும் உண்டு. ஒரு மாஸ் கமர்ஷியல் அரசியல் படங்களை அரம்பித்து வைத்தது மணிவன்னன் தான். இவர் எடுத்த “அமைதிப்படை” திரைப்படம் இன்று உள்ள ரசிகர்களாலும் கூட கொண்டாடப்படுகிறது. இவை ஒரு புறம் இருக்க, ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து வெளியான “முதல்வன்” திரைப்படம், ஒரு புதுவிதமான அரசியலை வெளிப்படுத்தியது. மேலும் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான “என்.ஜி.கே” திரைப்படம் சூர்யாவை ஒரு சமூக போராட்டக்காரராக மாற்றியது. விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய “சர்கார்” திரைப்படம், அரசாங்கத்தை எதிர்த்து ஒரு கூட்டத்தை ஒன்று திரட்டி கேள்வி கேட்க வைக்கும் விதமாக அமைந்திருந்தது. சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை காமெடியாக ரசிகர்களுக்கு நன்கு புரியும்படி அமைந்த படம் “எல்.கே.ஜி” என, அனைத்துப் படங்களும் மக்களுக்கு விருந்து படைத்தன. தற்போது விஜய் சேதுபதியின் “துக்ளக் தர்பார்” வேறு ஒரு அரசியலை பேசும் திரைப்படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

நானும் ரெளடி தான் கூட்டணி 

தமிழ் சினிமாவில் நடிப்பாலும், இயக்கத்தாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியவர் ரா.பார்த்திபன். எப்பொழுதும் தனது படங்களில் வித்தியாசத்தை காட்டக் கூடியவர். ஒத்த செருப்பு, சைஸ் ஏழு திரைப்படங்கள் மூலம் பாலிவுட்டையே திரும்பிப் பார்க்கச் செய்தவர். இவரும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்த ‘நானும் ரெளடி தான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் பார்த்திபன், விஜய் சேதுபதி கூட்டணி நடிப்பும் பாராட்டப்பட்டது. தற்போது “துக்ளக் தர்பார்” படத்திலும் இதே கூட்டணி தொடர்கிறது.

அதிதி, மஞ்சிமா 

கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் “துக்ளக் தர்பார்” படத்தில் விஜய் சேதுபதி அரசியல்வாதியாக நடிக்கிறார். மேலும் அதிதி ராவ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் உள்ள காட்சிகள் பார்பவர்களை ரசிக்க வைக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இவர் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழில் ஒரு சில படங்களில் நடித்த மஞ்சிமாவிற்கு பட வாய்ப்புகள் அதிகளவில் இல்லை. இப்படத்திற்கு பிறகு அந்த நிலைமை மாறும் என்று பலரால் சொல்லப்படுகிறது. இவர்கள் மட்டுமின்றி கருணாகரன் மற்றும் விஜய் சேதுபதியுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள பக்ஸ் பெருமாள் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் 50 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் மீதமுள்ள படப்பிடிப்பு துவங்கப்படும் என்று இயக்குனர் டெல்லி பிரசாத் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here