சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்டர்’ படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

‘டாக்டர்’

’கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன், புதிதாக ‘டாக்டர்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகனும், வில்லனாக வினய்யும் நடிக்கின்றனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 16ல் முதல் பாடல்

இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தின் அப்டேட்டை வெளியிட வேண்டுமென சிவகார்த்திகேயனின் ரசிகர்கள், சில நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் நிறுவனம், சமூக வலைத்தள பக்கத்தில் இன்று இரவு 7 மணிக்கு ‘டாக்டர்’ படத்தின் அப்டேட் வரவிருப்பதாக அறிவித்தது. அதன்படி 7 மணிக்கு வந்த அப்டேட்டில், ஜூலை 16ம் தேதி ‘செல்லம்மா…’ என்ற முதல் பாடலை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடல் வரிகளை சிவகார்த்திகேயனே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here