டுவிட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக்கொண்டதை பார்த்து கடுப்பான நடிகை ஓவியா “லூசுங்களாடா நீங்க” என்று கேட்டுள்ளார்.

எந்த சம்பந்தமும் இல்லை

தமிழில் களவானி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும், 2007ம் ஆண்டு வெளியான கங்காரு என்ற மலையாளப் படம் தான் ஓவியாவின் முதல் படம். களவானி படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன், கலகலப்பு போன்ற படங்களில் நடித்தார். தற்போது நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ஓவியா மிகவும் பிரபலமானார். நடிகர் ஆரவ்வை காதலித்துக் கொண்டிருப்பதாக கூறி வந்த நிலையில், தனக்கும் அவருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று ஓவியா தெரிவித்துவிட்டார்.

கடுப்பான ஓவியா

இதனிடையே, டுவிட்டரில் ரசிகர்கள் எழுப்பிய சுவாரஸ்யமான கேள்விகளுக்கு ஓவியா பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ஏடாகுடமான தகவலை பதிவிட, அதற்கு மிகவும் cool ஆக பதலளித்தார் ஓவியா. எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்று கேட்டதற்கு, அதற்கான சூழ்நிலைகள், நேரம், காலம் அமைந்தால் நிச்சயம் அதற்கு வருவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது என்றார். கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்த நிலையில், ‘தல’, ‘தளபதி’ ரசிகர்கள் இரண்டு பேர் திடீரென மோதிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆபாச வார்த்தைகளால் ஒருவரையொருவர் மாறி மாறி திட்டிக் கொண்டனர். இதனை பார்த்து கடுப்பான ஓவியா, “லூசுங்களாடா நீங்க” என்று திட்டியுள்ளார். ஒவியாவின் இந்த வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here