சசிகலாவிற்கு ஆட்சியிலும், கட்சியிலும் ஒரு போதும் இடமில்லை என்ற அதிமுகவின் நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எந்த மாற்றமும் இல்லை

தேசிய மீன்வளர்ப்போர் தினத்தை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில், இணையக் கருத்தரங்கை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்றும் சசிகலா இல்லாமல் அதிமுக ஆட்சியை நடத்துவதுதான் தங்களது முடிவு என்றும் கூறினார்.

அனுமதிக்க மாட்டோம்

ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி செல்வதை அதிமுகவினர் அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்த அவர், சசிகலாவிற்கு ஆட்சியிலும், கட்சியிலும் ஒரு போதும் இடமில்லை என்ற அதிமுகவின் நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றமில்லை என்று தெரிவித்தார். சசிகலா கட்டுப்பாட்டில் கட்சி செல்வதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது எனவும் அவர் கூறினார். முன்னதாக நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அதிமுகவை யார் வழிநடத்துவது என கட்சித் தலைமை தான் முடிவு செய்யும் எனக்கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here