இயக்குனர்கள் சிலருக்கு இரக்கம் என்பதே இல்லை என்று நடிகை மீரா சோப்ரா எனும் நிலா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

எதற்காக தற்கொலை செய்கிறார்கள்?

அன்பே ஆருயிரே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிலா. அதன்பின் ஜாம்பவான், லீ, மருதமலை, இசை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தியில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வரும் இவர், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தினாலேயே பிரபல நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக நிலா ஏற்கனவே குற்றம்சாட்டினார். இந்நிலையில் தற்போது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், நடிகர்கள் எதற்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் அவர்களை அந்த நிலைக்கு கொண்டு செல்வது எது என்ற விஷயங்களை வெளிப்படுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு

சினிமா துறை குறிப்பிட்டவர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்வதாகவும் நிலா குற்றம்சாட்டினார். முதிர்ச்சியான இயக்குனர்கள் அவ்வாறு செய்வது இல்லை எனக்கூறிய அவர், தனக்கும் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதை வெளிப்படுத்தினால் எத்தனை பேரின் ஆதரவு கிடைக்கும் என்பது கேள்விக்குறி தான் எனவும் அவர் கூறியுள்ளார். சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு பிறகும் எதுவும் இங்கே மாறவில்லை எனக் குறிப்பிட்டுள்ள நடிகை நிலா, வேலையை தாண்டியும் பல விஷயங்கள் சினிமா துறையில் நடக்கிறது என்றும் இந்த அழுத்தங்கள்தான் தவறான முடிவுகளை எடுக்க தூண்டுவதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here