‘கோப்ரா’ திரைப்படத்தில் நடிகர் விக்ரம் 20 வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எப்போதும் வித்தியாசம்

சீயான் விக்ரம் தனது நடிப்பிற்கு எப்போதும் பஞ்சம் வைக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். பல விதமான தோற்றங்களில் நடிக்க விரும்பும் சில நடிகர்களுள் விக்ரமும் ஒருவர். தனக்கு செட் ஆகாது என்று எதையும் விடாமல், சவாலான பல படங்களில் நடித்து நம்மை வியக்க வைத்தவர் தான் விக்ரம். தனது வித்தியாசமான நடிப்பால் பல வெற்றிப் படங்களை அவர் கொடுத்துள்ளார். அந்த லிஸ்டில் அடுத்து நிற்கிறது அனைவரையும் காக்க வைத்துக்கொண்டு இருக்கும் “கோப்ரா”. சீயான் விக்ரமின் அழகான நடிப்பில், ஏ.ஆர். ரகுமான் இசையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படத்தில், ஸ்ரீநிதி செட்டி விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் கே.ஜி.எப் படத்தின் மூலம் புகழ்பெற்றவர்.

போஸ்டருக்கு கிடைத்த வெற்றி

‘கோப்ரா’ படத்திற்கான முதல் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் விக்ரம் 7 கெட்டப்புகளில் தோன்றி மிரள வைத்துள்ளார். மே மாதம் ரிலீசாகும் என கூறப்பட்டிருந்த இப்படம், கொரோனா ஊரடங்கு காரணத்தால் தள்ளி போயுள்ளது. கோப்ரா படத்தின் சில காட்சிகளுக்கான படப்பிடிப்பு இன்னும் மீதமுள்ளதாகவும், ஊரடங்கு முடிந்தபிறகுதான் சூட்டிங் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் “தும்பி துள்ளல்” என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் யூ டியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. யூ டியூப்பில் இப்பாடல் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது.

20 தோற்றங்கள்?

விக்ரமின் 58வது படமாக உருவாகும் கோப்ரா படத்தில் அவர் இருபதிற்கும் மேற்பட்ட தோற்றங்களில் வருகிறார் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது. இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, அடுத்து “பொன்னியின் செல்வன்” படத்தில் கவனம் செலுத்த விக்ரம் திட்டமிட்டு இருந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக ‘பொன்னின் செல்வன்’ படப்பிடிப்பு தள்ளிப் போடப்பட்டுள்ளது. அதனால் கோப்ரா படத்தை முடித்துக் கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் நம்ம சீயான் விக்ரம். ரஷ்யாவில் நடைபெற இருக்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. லலித்குமார் தயாரிக்கும் கோப்ரா படத்தில் 20 தோற்றங்களில் வரும் விக்ரமை கான அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விக்ரம் படம் என்றாலே அதில் வித்தியாசமான நடிப்பு கண்டிப்பாக இருக்கும் என்பதால் இப்படத்தை பற்றி வெளிவந்த செய்திகள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகவும் ஆவலை தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here