பீட்டர் பாலுக்கு மது உள்ளிட்ட அனைத்து கெட்டப் பழக்கமும் உள்ளதாக அவரது முதல் மனைவியின் மகன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

பீட்டருடன் திருமணம்

விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மகளான வனிதா கடந்த 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. தனது திருமணத்திற்கு மகள்களும் துணை நிற்பதாக கூறிய வனிதா, பீட்டர் பால் வந்தபிறகு தனது வாழ்வில் வசந்தம் வீசுவதாக தெரிவித்திருந்தார். இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வர நெட்டிசன்கள் அதனை ஷேர் செய்தனர்.

திருமண சர்ச்சை

திருமணம் முடிந்த உடனே வனிதாவின் மூன்றாவது வாழ்க்கையும் சர்ச்சைக்கு உள்ளானது. அதற்கு காரணம் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் அளித்த புகார்தான். தனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே வனிதாவை பீட்டர் திருமணம் செய்துகொண்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும் பீட்டர் ஒரு குடிகாரர் என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார். இந்த நிலையில், பீட்டர் பாலின் மகன் சமூக வலைத்தளங்களில் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். தனது தந்தைக்கு அனைத்து விதமான கெட்டப் பழக்கங்களும் உள்ளதாக கூறியுள்ளார். பெண்கள் முதல் குடிப்பழக்கம் அவரிடம் இல்லாத பழக்கமே இல்லை என்றும் அவர் ஆக்ரோஷமாக குறிப்பிட்டுள்ளார்.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

மதுவுக்கு அடிமையாக இருந்த அவரை, மது அடிமைகள் மீட்பு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்ததாக தெரிவித்துள்ள பீட்டரின் மகன், அங்கிருந்தவர்களை ஏமாற்றிவிட்டு சுவர் ஏறி குதித்து தப்பி வந்தார் எனத் தெரிவித்துள்ளார். நடிகை வனிதாவின் வீட்டுக்கு ஒருமுறை அழைத்துச் சென்றதாகவும், ஆனால் வனிதாவை திருமணம் செய்யவிருப்பதுப் பற்றி எங்களிடம் எதுவும் சொல்லவில்லை என்றும் கூறினார். இருவரின் திருமண பத்திரிகை சமூக வலைத்தளங்களில் வெளியானபோது கூட, அது பொய்யான தகவல் என்றுதான் எனது தந்தை கூறினார். பின்னர் தெரிந்தவர்களிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டுக்கொண்டிருந்தார் என பீட்டர் பாலின் மகன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here