நடிகை சாயிஷா சமீபத்தில் வெளியிட்ட நடன வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை செமையாக கலாய்த்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால், நடிகர், நடிகைகள் தங்கள் வீட்டிலேயே தனக்கு பிடித்த பொழுதுபோக்கு வேலைகளை செய்து வருகின்றனர். எப்போதும் சூட்டிங் என்று பிஸியாக இருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் இந்த ஊரடங்கை நிம்மதியான விடுமுறை நாட்களாகவே கருதுகின்றனர். தன் குடும்பங்களுடன் பொழுதை கழிப்பது, பிடித்த உணவுகளை சமைப்பது, குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவது, உடலை பேணி காப்பது என பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக நேரம் யோகா செய்வதையும், உடற்பயிற்சி செய்வதையும், தனது செல்லப் பிராணிகளுடன் விளையாடுவதுமாகவும் இருந்து வருகின்றனர். இதில் சிலர் யூடியூப் சேனலை தொடங்கி, தங்களுக்கு தெரிந்த உணவு வகைகளையும், விதவிதமான மேக்கப் சாதன பொருட்களையும் விளம்பரப்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகின்றனர்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி

அந்த வகையில், நடிகர் ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா, எப்போதும் தான் நடனமாடுவதை வீடியோவாக எடுத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் சுடிதார் அணிந்து மெதுவாக கிளாசிக்கல் நடனம் ஆடும் வீடியோவை பார்த்த பல ரசிகர்கள், சாயிஷா கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால்தான் இவ்வளவு மெளிதான தொலதொலவென்று உடை அணிந்து மெதுவாக நடனம் ஆடுகிறார் என்றும் ஒரு வதந்தியை பரவி விட்டனர். அந்த வதந்தியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சாயிஷாவின் அம்மா, அவர் கர்ப்பமாக இல்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

செம குத்து

இந்த நிலையில், சமீபத்தில் சாயிஷா நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்களும் செம குஷியாகவே இருக்கின்றனர். எப்பொழுதும் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட சாயிஷா, வளைவு நெளிவு அசைவுகளை எந்தப் பாடலிலும் விட்டுவைக்கவில்லை. “தக்கி தக்கி ரும்பா” என்ற ஆங்கில பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டம் அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் எப்படி இவ்வளவு ஸ்லிம்மாக இருக்கிறீர்கள் என்றும் நல்லா டான்ஸ் ஆடுறீங்க என்றும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். ஆனால் சில நெட்டிசன்கள் “என்னமா ஆரம்பிச்சிட்டியா, இதே வேலையா போச்சு என்றும் கொஞ்ச நாளா அமைதியா இருந்தீங்களே என்ன காரணம், கர்ப்பமா இருக்கீங்கன்னு கேள்விப்பட்டோமே இப்படி குத்தாட்டம் போடுறீங்க” என்றும் நக்கலாக பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here