தேவையானவை

மட்டன் ஈரல் – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் – 2

இஞ்சி பூண்டு விழுது -2 சிட்டிகை

மிளகாய்த்தூள் – 2 சிட்டிகை

தனியாத்தூள் – 1 சிட்டிகை

மிளகுத்தூள் – 1/2 சிட்டிகை

மஞ்சள் தூள் – 1/2 சிட்டிகை

ரீபைண்ட் ஆயில் அல்லது கடலை எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – 1 சிட்டிகை

பட்டை – 2

செய்முறை

மட்டன் ஈரலை நன்கு கழுவிய பின், சிறுசிறு துண்டுகளாய் நறுக்கி வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்யை காயவைத்து, அதில் கடுகு மற்றும் பட்டையை சேர்த்து பொரிய விட வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். அதன்பின் ஈரலை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் அனைத்து வகையான தூள்களை சேர்த்து நன்கு கிளறி வேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் வற்றும்வரை வேகவைத்து மெதுவாக கிளறி விட்டு இறக்கினால் சுவையான மட்டன் ஈரல் வறுவல் தயார்.

மட்டன் ஈரலின் நன்மைகள்

மட்டன் ஈரலில் Vitamin B12, Vitamin A, Iron, Copper, protein போன்ற சத்துக்கள் உள்ளன. இரத்த சோகையை நீக்கக்கூடியது. கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. உடலை வலிமையாக்கும் தன்மை கொண்டது. உடல் சோர்வை நீக்க கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here