நடிகை வனிதாவை மறைமுகமாக சாடி கஸ்தூரி டுவீட் பதிவிட்டுள்ளதாக கூறி நெட்டிசன்ஸ் அதனை இணைய தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

திருமண சர்ச்சை

விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மகளான நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த 27ம் தேதி மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்று பின்னர் விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது பீட்டர் பாலை அவர் கரம் பிடித்துள்ளார். திருமணம் நடந்த மறுநாளே பீட்டரின் முதல் மனைவி மூலம் வனிதாவுக்கு பிரச்சனை ஆரம்பமானது. விவாகரத்து செய்யாமலேயே பீட்டர் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாகவும், தன் கணவர் தனக்கு வேண்டுமெனவும் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த செய்தி மீடியாவுக்கு தெரியவர, விவாகரத்து செய்யாத ஒருவரை வனிதா திருமணம் செய்துகொண்டதாக திரையுலகினர் பேசத் தொடங்கிவிட்டனர்.

மூக்கை நுழைக்காதீர்

இந்த நிலையில், திடீரென தான் நடத்தி வரும் யூடியூப் சேனலில் லைவ்வில் தோன்றிய நடிகை வனிதா, தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்தார். அதில் திருமணத்திற்கு முன்பு ஒரு மாதமாகவே தனது திருமணப் பத்திரிகைகள் சமூக வலைத்தளங்களின் மூலம் பரவிக் கொண்டிருந்த நிலையில், இந்த திருமணத்தை பற்றி பலரும் பல வகையில் விமர்சித்து வந்தனர். அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை கிடையாது. என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன். யாரும் அதில் குறுக்கிட நான் அனுமதிக்க மாட்டேன் என தடாலடியாக தெரிவித்தார். ஏற்கனவே திருமணம் பற்றி கருத்து தெரிவித்த நடிகை லட்சுமிராமகிருஷ்ணனை, வனிதா வறுத்தெடுத்தார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள டுவீட் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மறைமுக சாடல்

இதுதொடர்பாக கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில் “உங்களின் மொத்த வாழ்க்கைக் கதையையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிட்டு, தனிப்பட்ட விஷயம் எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார். தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையை பார்க்க வேண்டுமென்பது யாருக்கும் அவசியமான ஒன்று அல்ல எனவும் அதேசமயம் அது தவறாக இருந்தாலோ, அடுத்தவருடைய வாழ்க்கையை பாதிப்பதாக இருந்தாலோ பலர் கருத்து சொல்லத்தான் செய்வார்கள் எனவும் கூறியுள்ளார். நடிகை கஸ்தூரியின் இந்த டுவீட்டைப் பார்த்த நெட்டிசன்ஸ், அவர் மறைமுகமாக வனிதாவை குறிவைத்து டுவீட் போட்டுள்ளதாக கூறி அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here