கொரோனா, சாத்தான்குளம் என பல பிரச்சனைகள் இருக்கும் இச்சூழலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இப்ப இது தேவையா? என நடிகை விஜயலட்சுமி கேள்வி எழுப்பி விளாசித் தள்ளியுள்ளார்.

வெளியாகும் வீடியோக்கள்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக 10 ஆண்டுகளுக்கு முன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் நடிகை விஜயலட்சுமி. அந்த காலகட்டத்தில் சீமான் தன்னுடன் தனிமையில் இருந்ததாக கூறி சில புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அவர், அதன்பின் சீமானைப் பற்றி வாய் திறக்காமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் சிவ லிங்கத்தை தரிசனம் செய்த புகைப்படம் ஒன்றை வெளியிட்ட சீமானுக்கு எதிராக, வீடியோ ஒன்றை வெளியிட்டார் விஜயலட்சுமி. அந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் நடிகை விஜயலட்சுமியை ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து சீமானை கண்டித்து நிறைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் விஜயலட்சுமி வெளியிட்டு வருகிறார். ஆனால் இதனை பொருட்படுத்தாத சீமான், அவருடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.

ராஜபக்சே என்ன வெங்காயமா?

இதற்கிடையே, உள்ளம் கொள்ளை போகுதே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை சீமான் பாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து கொந்தளித்த நடிகை விஜயலட்சுமி, சீமானுக்கு பல கேள்விகளை முன்வைத்ததுடன், கேலியும், கிண்டலும் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், பத்து வருடங்களுக்கு முன்பு ராஜபக்சேவை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஒரு போராட்டம் நடந்தது. திரையுலகினர் பலர் கலந்துகொண்ட அந்தப் போராட்டத்தில் சீமானும் இருந்தார். அப்போது மேடையில் கொந்தளித்த சீமான், ராஜபக்சே என்ன வெங்காயமா? என்று திட்டித் தீர்த்ததோடு மட்டுமில்லாமல் எல்லாரையும் தூங்கவிடாமல் எழுப்பினார்.

இப்ப இது தேவையா?

பல பிரச்சனைகளை தாண்டி வரும் மக்கள் தற்போது கொரோனாவால் மீண்டு வர முடியாமலும், சாத்தான்குளம் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் இந்த நிலையிலும், சீமானுக்கு காதல் பாடல் ரொம்ப தேவையா?. ஏன் கொரோனா பிரச்சனை, சாத்தான்குளம் பிரச்சனையெல்லாம் அவர் தொண்டர்களுக்கு தெரியாதா? அவருக்கு பாடனும் என்று தோன்றினால் அனைவரும் பாட வேண்டும், அவருக்கு ஆடனும் என்று தோன்றினால் அனைவரும் ஆட வேண்டும், சண்டை போடனும் என்று தோன்றினால் அனைவரும் சண்டை போட வேண்டும் அதுதான் சீமான். இப்போ இருக்கும் சூழ்நிலையில், இந்த பாடல் ரொம்ப தேவைதானா?. வீட்டில் அமர்ந்து பாட வேண்டிய பாடலை, பொது இடத்தில் இப்படி பாடுவது நாகரீகமா என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here