சர்வதேச போதைப் பொருள் தடுப்பு தினத்தையொட்டி தமிழக காவல் துறையுடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலக நாயகன் 2.0

இரண்டு கைகளிலும் ஆஸ்கார் விருதுகளை வைத்துக்கொண்டு ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று சொல்லி தமிழர்களுக்குப் பெருமிதம் தேடித் தந்தவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். உலகம் முழுதும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருவதால் அவர் மக்களோடு நேரடியாக உரையாடுகிறார். அதனால்தான் அவர் சாதி, மதம், மொழி சார்ந்த பிரச்சனைகளை உலகம் முழுவதும் உள்ள நிறவெறியோடு ஒப்பிட்டு அவரால் பார்க்க முடிந்தது. சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசனுடனான நேர்காணலில் அதை வெளிப்படுத்தினார்.

சினிமாவும் போதையும்

1980களில் சினிமாவில் கள்ளச்சாராயம் காய்ச்சும் காட்சிகள்போல், இப்போது பொட்டலம் வாங்கும் காட்சிகள் வருகின்றன. போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஒருவர் மயக்க ஊசி போடாவிட்டால் கதிகலங்கிப் போவது போலவும், அடிக்கடி பார்ப்பதற்கு குளுக்கோஸ் போலவே இருக்கும் பவுடரை மூக்கால் உறிஞ்சுவது போலவும் காட்சிகளைப் பாத்திருக்கலாம். சமீபத்தில் வெளியான ‘கைதி’, ’மாஃபியா’ போன்ற படங்களின் கதையே ‘ஆண்டி நார்காட்டிக் ப்யூரோ’ எப்படி பலகோடி ரூபாய் பெறுமானம் உள்ள போதைப் பொருட்களை தமிழ்நாட்டுக்குள் பரவவிடாமல் தடுத்தது என்பதுதான்.

உண்மை நிலவரம்

நெட்ஃப்ளிக்ஸில் வரும் ’பிரேக்கிங் பேட்’ தொடரில் ஒரு கெமிஸ்ட்ரி பேராசிரியர், சூழ்நிலை காரணமாக ஏன்  மெத்தாம்பிடைமின் (METHAMPHETAMINE) என்ற போதைப் பொருளைத் தயாரிக்கிறார். பின் அவரே அந்த மாஃபியாவின் தலைவராகிறார் என்று வரும். சமீபத்தில் மாமல்லபுரத்தின் அருகே கரை ஒதுங்கிய ஒரு டிரம்மில் சைனா டீத்தூள் என்ற பெயரில் 230 கோடி ரூபாய் மதிப்புள்ள அதே மெத்தாம்பிடைமின் இருந்தது. அமேசான் கிண்டிலில் நடந்த pen to publish போட்டியில் முதல் பரிசு வென்ற ’பரிங்கிமலை ரயில் நிலையம்’ என்ற நாவலில் பள்ளி வாசலில் நிற்கும் தள்ளு வண்டிக் கடைகளில் ஐஸ், சமோசா, பானிப்பூரிக்கு நடுவில் எப்படி கஞ்ஜாவும், அபினும் விற்கப்படுகிறது என்பதைக் கற்பனைக் கதையாக நினைக்க முடியவில்லை.

இசைதான் மருந்து

இதனிடையே, சர்வதேச போதைப் பொருள் தடுப்பு தினத்தையொட்டி தமிழக காவல் துறையுடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த COVID 19லிருந்துகூட ஒருவர் மீண்டுவிடலாம். ஆனால் போதைக்கு அடிமையானவரால் ஏற்படும் சமூகப் பிரச்சனைகளிலிருந்து மீள்வது அதைவிட முக்கியம் என்று தெரிவித்தார். கொடூரக் குற்றங்கள், வன்கொடுமைகளில் ஈடுபடுவதிலிருந்து இளைய தலைமுறையை மீட்போம் என்று சபதம் எடுத்துக் கொள்ளவும் ஏ.ஆர். ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார். சின்ன வயதிலேயே அப்பாவைப் பரிகொடுத்த ஒருவர் தன் ஒழுக்கத்தாலும், உழைப்பாளும் இந்த இடத்தை அடைந்துள்ளார் என்றால் நல்ல இசையைவிட வேறென்ன நிவாரணம் இருக்கப்போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here