‘கும்கி’ படத்தில் நடித்த இளம் நகைச்சுவை நடிகர் அஸ்வின் தனது காதலியை முறைப்படி கரம் பிடித்தார். இவர்களது திருமணம் அரசு விதிமுறைப்படி சமூக விலகலுடன் சென்னையில் எளிமையாக நடந்தது.

நகைச்சுவை நடிகர்

கோலிவுட்டில் ‘உள்ளம் கொள்ளை போகுதே’, ‘அன்பே சிவம்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளர்களில் ஒருவர் சுவாமிநாதன். இவரது மகனான அஸ்வின், ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு வந்தான் வென்றான், கும்கி, தில்லுமுல்லு, நையாண்டி, நெடுஞ்சாலை, கணிதன், அச்சமின்றி உள்பட 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கும்கி திரைப்படத்தில் பெரிய கேரக்டரில் நடித்ததால் தன் பெயருக்கு முன்னால் கும்கியை சேர்த்துக் கொண்டார் அஸ்வின். தற்போது தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்ட அஸ்வின், தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

காதல் திருமணம்

சென்னை கே.கே.நகரில் வசித்து வரும் ராஜசேகர் என்பவரது மகள் வித்யா ஸ்ரீயை அஸ்வின் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அமெரிக்காவில் எம்.எஸ். பட்டப்படிப்பை முடித்துள்ள வித்யா ஸ்ரீக்கும், அஸ்வினுக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் சம்மதித்தனர். இதனையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

சமூக விலகலுடன் திருமணம்

கும்கி அஸ்வின்-வித்யாஸ்ரீ திருமணம் சென்னை சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் நேற்று நடந்தது. கொரோனா ஊரடங்கினால் அரசு விதிமுறைப்படி சமூக விலகலுடன் குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களை வைத்து இந்த திருமணத்தை நடத்தினர். ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கும்கி அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரபல தயாரிப்பாளர் மகனின் திருமணமாக இருந்தாலும் நெருங்கிய சொந்தங்கள் 20 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here