ஃபாதர்ஸ் டே ஸ்பெஷல் எபிசோடாக யூடியூப் சேனலில் முதல்முறையாக ஷாந்தனு தனது அப்பாவை ஒரு இண்டர்வ்யூ எடுத்தார். அதில் ஒரு ரசிகர் சாந்தனுவை ‘பாய்ஸ், காதல், சுப்ரமணியபுரம்’ போன்ற படத்தில் நடிக்கவிடாமல் தடுத்ததுக்காக வருத்தப்பட்டிருக்கீங்களா? என கேட்ட கேள்வி எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தது.

பாக்யராஜின் பதில்

ஷங்கர் வந்து பாய்ஸ் கத சொன்னப்போ உனக்கு மீச கூட முளைக்காத வயசு. லவ், ஒரு பொண்ண இழுத்துட்டு ஓட்றதெல்லாம் முதல் படத்துக்கு சரியா வராதுன்னு அப்ப யோசிச்சேன். பாலாஜி சக்திவேல் காதல் கதைய ரொம்ப ரசிச்சேன். ஆனா ஒரு மெக்கானிக்கா நடிக்கறதுக்கான தோற்றம் உனக்கு அப்ப இல்ல. அதனால இன்னும் மெச்யூர்ட் ஆன ஒரு பையன் நடிச்சாதான் நல்லா இருக்கும். இவ்ளோ சின்ன பையன் ஒரு பொண்ண இழுத்துட்டு ஓடுரான்னா பாக்க கன்வின்ஸ் ஆகாதுன்னு தோனுச்சு. சசிகுமார் சுப்ரமணியபுரம் கத சொல்லி அட்வான்ஸ் எல்லாம் கொடுக்கத் தயாரா இருந்தார். ஆனா அப்ப சக்கரக்கட்டி லான்சுக்காக உன்ன நான் கமிட் பண்ணிட்டேன். ஏ.ஆர். ரஹ்மான் பாட்டுக்காக வெயிட்டிங். தானு சார் மகன் இயக்கம். நான் தானு சார் கிட்டயும் படத்த தள்ளிப்போட சொல்ல முடியாது. ரஹ்மான் கிட்டயும் கேக்க முடியாது. சசிகுமார் கிட்டதான் ரெக்வஸ்ட் பன்னேன். அவரும் ஷூட்டிங் ஆரம்பிச்சிடுச்சுன்னார். அதனால அது மிஸ் ஆச்சு.

டிசைன் அப்படி

பின்புலம் இருப்பவர், இல்லாதவர்னு பேதம் எல்லாம் பாக்காம திறமைக்கேத்த வாய்ப்பு கிடைக்க ஏதும் ஒரு சிஸ்டம் கொண்டுவர முடியுமாங்கற கேள்விக்கு, எந்த வாய்ப்பு யாருக்கு அமையனும்னு இருக்கோ அவங்களுக்குதான் அமையும்னு  அவர் பானிலயே பதில் சொன்னார். அவர் சொன்னதுல உள்ளார்ந்த அர்த்தம் இருக்கு. சாந்தனு தவறவிட்ட பாய்ஸ், சுப்ரமணியபுரம், காதல் மூனும் ஹிட். ஆனா அதுல நடிச்ச நடிகர்கள் இன்னும் அதை மிஞ்சின வெற்றினு ஒன்ன குடுக்கல.

சினிமாவில் நெப்பாடிஸம்

சுஷாந்த் சிங் மரணத்தையொட்டி நெப்பாட்டிஸம் பத்தி பேசும்போது, எவ்ளோ பெரிய செலிப்ரிட்டியோட வாரிசாவே இருந்தாலும் சினிமால ஒரு காட் ஃபாதர் வேணும். எவ்வளவோ பேர் ஆசப்படக்கூடிய தோனியா நடிச்சா என்ன மாதிரி திரிஷ்டி, எதிர்ப்பு, வெறுப்பு எல்லாம் வரும்னு சினிமால சீனியர் யாராச்சும் அவருக்கு சொல்லிட்டே இருந்திருக்கனும். சொல்லப்போனா வாரிசு நடிகர்களுக்கு மைனசே தந்தைகள்தான். அதனாலதான் எவ்வளவோ பேர அறிமுகப்படுத்திய அமிதாப்பச்சன் மகன் முதல் பாரதிராஜா மகன் வரை இன்னும் அவங்க அடையாளத்துக்காக போராடிட்டு இருக்காங்கன்னு பாக்யராஜ் சொன்னார். 

காட்ஃபாதர் அவசியமா

கிரிக்கெட் விளையாடிட்டு இருந்த கார்த்திக்கை பாரதிராஜா கண்டெடுத்தது மாதிரி, சூர்யாவை வேற ஒரு ஆளா பாலா மாத்திக்காட்டின மாதிரி, எடுத்த எடுப்புல யார்றா இவன்னு இண்டஸ்ட்ரியே ‘கார்த்தி’யை திரும்பிப் பாக்குற அளவுக்கு பருத்திவீரன்ல அமீர் பட்டைதீட்டுன மாதிரி, சாந்தனுவை புடம்போட ஒரு காட்ஃபாதர் உடனடி தேவை. அது கௌதம் மேனன் மணிரத்னமாதான் இருக்கனும்னு இல்ல ஒரு புதுமுக இயக்குநராக்கூட இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here