EXCLUSIVE

கமல்ஹாசனின் ‘அண்ணாத்த ஆடுறார்’ பாடலுக்கு டிரெட்மில்லில் நடனமாடி புகழ்பெற்ற நடிகர் அஸ்வின் குமார், இதுதான் தனது முதல் வெற்றி எனக் கூறியுள்ளார்.

அஸ்வின் குமார்

தமிழில் ‘துருவங்கள் பதினாறு’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்தவர் நடிகர் அஸ்வின்குமார். சமீபத்தில் வெளியான இவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளை பெற்றது. அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்றிருக்கும் “அண்ணாத்த ஆடுறார்” பாடலுக்கு அஸ்வின் குமார் டிரெட்மில்லில் நடனமாடும் வீடியோதான் அது. அச்சுப்பிசகாமல் கமல்ஹாசன் போலவே நடனமாடிய அஸ்வின், அதனை டுவிட்டரிலும் பகிர்ந்தார். அஸ்வினின் இந்த நடனத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், அவரை வெகுவாக பாராட்டினார்.

Littletalks நேரலையில் அஸ்வின்

இதனிடையே, Littletalks யூடியூப் தொலைக்காட்சியின் பிரத்யேக நேரலையில் பங்கேற்ற நடிகர் அஸ்வின்குமார் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது; நான் ஒரு தமிழன். துபாயில் தான் வளர்ந்தேன். எல்லாருடைய மொழியையும், கலாச்சாரத்தையும் முறையாக கற்றுக்கொண்டேன். நான் யாரைப் பார்த்தாலும் கவனிப்பேன். அப்படியே அவர்கள் மாதிரியே பண்ணுவேன். சின்ன வயதில் இருந்தே எனக்கு இந்த பழக்கம் இருக்கு.

தீவிர ரசிகன்

நான் கமல்ஹாசனுடைய மிகப்பெரிய ரசிகன் என்றதாலே இன்னும் ஆழமான அவருடைய நுணுக்கமான அசைவுகள் நடை பாவனைகள் எல்லாவற்றையும் கவனித்து நடனம் ஆடினேன். அது தற்போது நன்றாக வந்துள்ளது. ஆனால் கமல்ஹாசன் அவர்கள் டுவிட் செய்வார் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அதுவும் கலைத்தாயின் மகன், என் மகனே என சொன்னது, அதை விட வேற என்ன வேணும் எனக்கு. நான் ஐந்து வருடமாக டிரெட்மிலில் டான்ஸ் ஆடி வருகிறேன். தற்போது வைரலாய் இருக்கும் ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து வந்தால் அல்லது போராடி வந்தால் ஒரு நாள் நிச்சயமாக அதற்கு வெற்றி கிட்டும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். ஒரு ரகசியம் சொல்லவா. இதுவரைக்கும் நான் யாருகிட்டயும் சொன்னதில்லை. முதலில் இசை இல்லாமல்தான் வீடியோவை நான் எடுப்பேன். அதன் பின்புதான் நடனத்திற்கு ஏற்ப இசையை சேர்த்துக்கொள்வேன். இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத உண்மை இது.

டிரெட்மிலில் ‘வாத்தி கம்மிங்’

ஜூன் 21ம் தேதி என்னுடைய பிறந்த நாள். ஜூன் 22ம் தேதி விஜய் சாருடைய பிறந்தநாள். எனக்கும் விஜய் சாருக்கும் ஸ்பெஷலா இருக்கணும்னுதான் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு டிரெட்மிலில் டான்ஸ் ஆடி அவருக்கு டெடிகேட் செய்தேன். விஜய் சார் ஒரு பெஸ்ட் டான்ஸர். எனக்கு அவருடைய டான்ஸ் எல்லாமே ரொம்பவே பிடிக்கும். மக்கள் மட்டும் இந்த வீடியோவைப் பார்த்து பகிராமல் பொருட்படுத்தாமல் இருந்திருந்தால், யாருக்கும் என்னை தெரிய வாய்ப்பே இருந்திருக்காது. மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள். இவ்வாறு நடிகர் அஸ்வின் குமார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here